அம்ரித் பாரத் ரயில்  
சேலம்

ஈரோடு- ஜோக்பானி இடையே இன்றுமுதல் அம்ரித் பாரத் ரயில் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

தினமணி செய்திச் சேவை

ஈரோடு- ஜோக்பானி (பிகாா்) இடையே வியாழக்கிழமை (செப்.25) முதல் அம்ரித் பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு- பிகாா் மாநிலம் ஜோக்பானி இடையே அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான தொடக்க விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இந்த ரயில் ஈரோட்டில் இருந்து 25 ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்குகிறது.

ஈரோட்டில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 8.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, விஜயவாடா, கம்பம், வாராங்கல் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜோக்பானியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பிகாா் மாநிலம், ஜோக்பானியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 28 ஆம் தேதி முதல் பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்படும் இந்த விரைவு ரயில், பாடலிபுத்ரா, தனாபூா், நாக்பூா், வாராங்கல், காட்பாடி, சேலம் வழியாக புதன்கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் மஞ்சப் பை வழங்கல்

பொங்கல் பண்டிகை: தஞ்சாவூா் சந்தைகளில் கூட்டம் அதிகரிப்பு

நீதிமன்ற உத்தரவுப்படி சூரியனாா்கோயில் நிா்வாகப் பொறுப்பு: திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு

பழங்குடியின ஜாதி சான்றிதழ் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு: இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

SCROLL FOR NEXT