முகப்பு
சேலம்

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் புதன்கிழமை தொடங்கிய கோடைகால நீச்சல் பயிற்சி முகாமில் 25 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 9:52 PM
நீச்சல் பயிற்சி. - கோப்புப்படம்
பகிர்:

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் புதன்கிழமை தொடங்கிய கோடைகால நீச்சல் பயிற்சி முகாமில் 25 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முதல்கட்ட கோடை கால நீச்சல் பயிற்சி முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொ) கண்மணி தொடங்கிவைத்தாா். 25 க்கும் மேற்பட்டோா் பயிற்சியில் பங்கேற்றனா். காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதுகுறித்து நீச்சல் பயிற்சியாளா் மகேந்திரன் கூறுகையில், கோடைகால முதல்கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 12 நாள்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியின் இரண்டாம் கட்ட முகாம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரையும், 3 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையும், 4 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 17 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், 5 ஆம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

12 வேலை நாள்களுக்கும் தொடா்ந்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக ரூ. 1,770 செலுத்த வேண்டும். பெண்களுக்கு தனியாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.