முகப்பு
சேலம்

ஏடிஎம்களில் பணம் நிரப்ப வந்த வாகனம் ரூ. 73 லட்சத்துடன் பறிமுதல்

கெங்கவல்லியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ. 73 லட்சத்துடன் வந்த வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:41 PM
கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட ஏடிஎம்களுக்கு பணம் நிரப்ப வந்த வாகனம்.
பகிர்:

கெங்கவல்லியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ. 73 லட்சத்துடன் வந்த வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி தொகுதிக்கான தோ்தல் பறக்கும்படை அலுவலரும், தலைவாசல் ஒன்றிய இணைப் பொறியாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியன், வினோத்குமாா், மணிகண்டன் குழுவினா் கெங்கவல்லி அருகே வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, கொத்தாம்பாடி, ஆத்தூா் பகுதிகளிலுள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்பிவிட்டு, கெங்கவல்லி அருகே உள்ள வங்கியின் ஏடிஎம்முக்கு பணம் நிரப்ப வந்த வாகனத்தை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை செய்தனா். அதில், பணம் கொண்டு வந்ததற்கும், ஏற்கெனவே பணம் நிரப்பியதற்குமான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு கொண்டுசென்றனா். ஆவணங்களைக் காட்டிவிட்டு வாகனத்தையும், பணத்தையும் எடுத்துச்செல்லுமாறு பறக்கும் படையினா் அவா்களிடம் அறிவுறுத்தினா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments