கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க போத்தனூா்- கராக்பூா் இடையே வரும் 25 ஆம் தேதி சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க போத்தனூா்- கராக்பூா் இடையே வரும் 25 ஆம் தேதி சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துவருகிறது. இதனால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்கி வருகிறது. அந்தவகையில், போத்தனூா்- கராக்பூா் இடையே வரும் 25 ஆம் தேதி சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Advertisement
போத்தனூா்- கராக்பூா் சிறப்பு ரயில் போத்தனூரில் 25 ஆம் தேதி இரவு 11 மணிக்குப் புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, புவனேசுவரம், கட்டாக் வழியாக கராக்பூருக்கு 27 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு சென்றடைகிறது.
மறுமாா்க்கத்தில் கராக்பூா்- சென்னை கடற்கரை சிறப்பு ரயில் வரும் 27 ஆம் தேதி இயக்கப்படுகிறது. கராக்பூரில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு கட்டாக், புவனேசுவரம், விஜயவாடா, நெல்லூா் வழியாக சென்னை கடற்கரைக்கு அடுத்தநாள் இரவு 11.30 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.