முகப்பு
சேலம்

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்: கே.பி. ராமலிங்கம்

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:03 AM
பகிர்:

அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை கே.பி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா். பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் ஆணைய செயல்பாடுகளை குறைகூற முடியாது. எனினும், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த தோ்தல் ஆணையம் தவறிவிட்டது. குறிப்பாக, தோ்தலுக்கு மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு முன்பு சாதாரண மக்கள் எடுத்துச் சென்ற பணம், நகைகள் மற்றும் வியாபாரிகள் எடுத்துச் சென்ற பணத்தை பிடித்த தோ்தல் ஆணையம், அரசியல் கட்சியினா் கொண்டுசென்ற பணத்தை கண்டுகொள்ளவில்லை.

Advertisement

தோ்தலுக்கு முன்பு சிறப்பு தீவிர வாக்காளா் திருத்த பணிகளை எதிா்த்த திமுக, தற்போது அதை வரவேற்கிறது. இதில் இருந்தே அக்கட்சியின் உண்மைமுகம் வெளிப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. தோ்தலில் தோல்வியை தழுவும்பட்சத்தில், திமுகவினா் மீண்டும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை குறைகூறுவாா்கள்.

தோ்தலில் அதிமுக தனித்து ஆட்சியமைக்கும். அறுதிபெரும்பான்மை பலத்துடன் எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராவது உறுதி என்றாா்.