கைது 
சேலம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி வேன் ஓட்டுநா் கைது!

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த பள்ளி வேன் ஓட்டுநா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

மேட்டூரை அடுத்த சேலம் கேம்ப் சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் திவாகா் (28), பள்ளி வேன் ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், பள்ளிக்குச் செல்லும் சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதனால் சிறுமி கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா், சேலம் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகாா் அளித்தனா்.

இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் நல அலுவலா்கள், மேட்டூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், திவாகரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

2030-க்குள் 28,000 கோடி டாலா் வருவாய்: ஓபன்ஏஐ இலக்கு

இம்மையிலும் நன்மை தருவாா் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

அரசு பொதுத் தோ்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருக்கோவிலூரில் கபிலா் கோட்டம் அமைக்க வேண்டும்

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT