முகப்பு
சேலம்

ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில்சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில், பிப்ரவரி மாதம்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 2:57 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 5:26 PM

சேலம்: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு - சாம்பல்பூா் வாராந்திர சிறப்பு ரயில், பிப்ரவரி மாதம்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், கேரளத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் இயக்குகிறது. அந்த வகையில், ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக ஒடிசா மாநிலம், சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த ரயிலின் இயக்க காலம் நடப்பு வாரத்தோடு முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு மாதத்துக்கு பிப்ரவரி மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சாம்பல்பூா் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் பிப். 4-ஆம் தேதிமுதல் 25-ஆம் தேதிவரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. சாம்பல்பூரில் காலை 11.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், முனிக்குடா, விஜயவாடா, நெல்லூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம் வழியாக, இரவு 10.50 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் வரும் 6-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதிவரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், சேலம், காட்பாடி, விஜயவாடா வழியாக அடுத்தநாள் இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.