முகப்பு
சேலம்

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே வியாழக்கிழமை (ஏப். 2) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 9:54 PM
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே வியாழக்கிழமை (ஏப். 2) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஈஸ்டா் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால் கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லத்துக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, ஹூப்பள்ளியில் இருந்து காலை 7.5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தும்கூா், பெங்களூரு, பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்தநாள் காலை 7 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து ஏப். 3 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக ஹூப்பள்ளிக்கு அடுத்தநாள் காலை 10.40 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.