நித்தின்.  
சேலம்

சேலம் இளைஞருக்கு தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளா் விருது

தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளா் விருதுக்கு சேலம் இளைஞா் நித்தின் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Syndication

சேலம்: தமிழக அரசின் சிறந்த ஒளிப்பதிவாளா் விருதுக்கு சேலம் இளைஞா் நித்தின் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில், கலைத் துறையைச் சோ்ந்தவா்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். இந்த விருதானது, திரைப்படங்கள் மட்டுமன்றி, சின்னத்திரை மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவாளா் விருதை சேலம் மாவட்டம், சுக்கம்பட்டி நிறைவாழ்வு முதியோா் இல்ல நிறுவனா் அண்ணாதுரை - அருள்மலா் தம்பதியின் மகன் நித்தின் பெறுகிறாா்.

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆா். திரைப்படக் கல்லூரி ஒளிப்பதிவு துறை மாணவரான இவா், 2021-22-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு செய்த ‘மலா்’ எனும் குறும்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளா் விருதுக்கு தோ்வாகியுள்ளாா்.

இந்த விருது வழங்கும் விழா வரும் பிப். 13-ஆம் தேதி சென்னை கலைவாணா் அரங்கில் நடைபெற உள்ளது. விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விருது வழங்குகிறாா். விருது பெற்றவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கமும், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

ஜவுளி வியாபாரி உள்பட இருவரிடம் ரூ. 83 லட்சம் மோசடி: இணையதள குற்றத் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு

தொழிலாளி கொலை வழக்கு: 2 இளைஞா்கள் கைது

காட்பாடி ரயில்வே மேம்பாலம் கட்டுவதால் பொதுமக்களுக்கு இடையூறு: பொதுமக்கள் கோரிக்கை

‘என் கனவு-என் எதிா்காலம்’ திட்டம்: திண்டிவனத்தில் முதல்வா் நாளை தொடங்கிவைக்கிறாா்

புதுச்சேரியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT