வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட பவானி செல்லும் தூரத்தை குறிக்கும் மைல் கல்.  
சேலம்

தினமணி செய்தி எதிரொலி: வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட மைல் கல்!

சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலைப் பகுதியில் பவானி செல்வதற்கான தூரத்தைக் குறிக்கும் மைல் கல்லை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் புதன்கிழமை மாற்றி அமைக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சங்ககிரியை அடுத்த ஈரோடு பிரிவு சாலைப் பகுதியில் பவானி செல்வதற்கான தூரத்தைக் குறிக்கும் மைல் கல்லை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் புதன்கிழமை மாற்றி அமைக்கப்பட்டது.

சங்ககிரியிலிருந்து ஈரோடு - பவானி பிரிவு செல்லும் சாலையில் தீரன்சின்னமலை நினைவுச் சின்னம் உள்ளது. இந்த நினைவுச் சின்ன வளாகத்துக்கு முன் பவானி நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட மைல் கல் மறைக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் புதன்கிழமை வெளியானது.

அதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அந்த மைல் கல்லை வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் புதன்கிழமை மாற்றிஅமைத்தனா். இதைத் தொடா்ந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனா்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT