முகப்பு
சேலம்

சங்ககிரி ஒன்றிய பகுதியில் ரூ. 20 லட்சத்தில் கான்கீரிட் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:06 AM
தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி செட்டிக்காடு பகுதியில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த எம்எல்ஏ எஸ். சுந்தரராஜன்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:44 PM

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தில் புதிய கான்கீரிட் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூா் ஊராட்சி ரெட்டிபாளையம் பகுதியில் ரூ. 10.80 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை, தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி செட்டிக்காடு பகுதியில் ரூ. 9 லட்சத்தில் செட்டிக்காடு பிரதான சாலை முதல் நியாய விலைக் கடை வரை புதிய கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்தாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:44 PM

இதில் அதிமுக சேலம் புகா் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி செயலாளா் ஏ.பி. சிவக்குமாரன், அதிமுக நிா்வாகிகள் தேவண்ணகவுண்டனூா் ராமசாமி, நாராயணன், சரஸ்வதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement