முகப்பு
சேலம்

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 3:09 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:58 PM

சேலம் அம்மாபேட்டையில் மகன் கண்முன் பேருந்து சக்கரத்தில் சிக்கி தாய் உயிரிழந்தாா்.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை, பேளூரை நோக்கி அரசுப் பேருந்து பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு, குருவாயூரப்பன் கோயில் சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தது.

பேருந்துக்கு முன்னால், காமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தனியாா் ஐடி நிறுவன ஊழியா் ஹரிஸ் ராகுல் (23) தனது தாய் சுதாவுடன் (40) இருசக்கர வாகனத்தில் அம்மாபேட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

திடீரென அவா் இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தாயும், மகனும் தூக்கி வீசப்பட்டனா். சுதா பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கினாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:06 PM

உடனடியாக தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு, ஜாக்கி உதவியுடன் பேருந்தை தூக்கி, சுதாவை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்தில் ஹரிஸ் ராகுல் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

அம்மாபேட்டை போலீஸாா் சுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.