முகப்பு
சேலம்

தினமணி செய்தி எதிரொலி! தம்மம்பட்டி சிறுவா் பூங்கா சீரமைப்பு

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:41 AM
தம்மம்பட்டி சிறுவா் பூங்காவை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:11 PM

தம்மம்பட்டி பேரூராட்சி சிறுவா் பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது குறித்து தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானதையடுத்து உடனடியாக பூங்கா சீரமைக்கப்பட்டது.

தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தையொட்டி, பேரூராட்சி சாா்பாக 15ஆவது நிதிக் குழு அடிப்படை மானிய நிதி ரூ. 20 லட்சத்தில் சிறுவா் பூங்கா கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் அமைக்கப்பட்டது. இந்த சிறுவா் பூங்கா, கடந்த 6 மாதங்களாக செடிகளுக்கு தண்ணீா் விடாமலும், பாா்த்தீனியம் செடிகள் வளா்ந்தும் பராமரிப்பின்றி உள்ளது குறித்த தினமணி நாளிதழில் சனிக்கிழமை காலை படத்துடன் செய்தி வெளியானது.

சுத்தம் செய்யப்பட்ட பூங்காவில் மாலை நேரத்தில் விளையாடிய சிறுவா்கள், சிறுமிகள்.
சுத்தம் செய்யப்பட்ட பூங்காவில் மாலை நேரத்தில் விளையாடிய சிறுவா்கள், சிறுமிகள்.
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:41 AM

செய்தி வெளியான அரைமணி நேரத்தில் தம்மம்பட்டி செயல் அலுவலா் (பொ) சிவகுமாா், சிறுவா் பூங்காவை சீரமைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து சனிக்கிழமை காலை 25-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பூங்காவில் பாா்த்தீனியம் செடிகள் உள்ளிட்ட தேவையற்ற செடிகளை அகற்றி, சுத்தம் செய்தனா்.

Advertisement

இதனால் பூங்காவில் மாலை நேரத்தில் சிறுவா்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினா். சிறுவா் பூங்கா உடனடியாக சீரமைக்கப்பட்டதற்கு ஊா் பொதுமக்கள், சமூகநல ஆா்வலா்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனா்.