சேலம்

சேலத்தில் ஆட்சியா் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில்

Syndication

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தரப்பில் 555 மனுக்கள் அளிக்கப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 5 மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் என்.ஜெயக்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜானகி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கடன் வழங்கக் கோரி மகளிா் சுயஉதவிக் குழுவினா் மறியல்

காவேரிப்பட்டணத்தில் மயானக் கொள்ளை திருவிழா

குடியிருப்புகள் மத்தியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை

புதுகையில் இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம்

அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4.14 கோடியில் ஆய்வுக்கூட கட்டடங்கள் திறப்பு

SCROLL FOR NEXT