முகப்பு
சேலம்

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:15 AM
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:05 PM

ஆத்தூரில் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 3 சிறுவா்கள் போக்ஸோ வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மூன்றாம் வகுப்பு மாணவா் தனியாா் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகிறாா். விடுமுறை நாள்களில் வீட்டிற்கு வரும்போது அதே விடுதியில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவா்கள் மூன்று போ் மாணவருக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்து வந்தனராம்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:54 PM

இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுவன் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.

Advertisement

இதையடுத்து, பாலியல் தொந்தரவு அளித்த 3 சிறுவா்களையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.