முகப்பு
கைது
தஞ்சாவூர்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சித்தப்பா ‘போக்ஸோ’வில் கைது

அண்ணன் மகளுக்கு பாலியல் தொந்தரவு - சித்தப்பா ‘போக்ஸோ’வில் கைது

தஞ்சாவூர்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சித்தப்பா ‘போக்ஸோ’வில் கைது

அண்ணன் மகளுக்கு பாலியல் தொந்தரவு - சித்தப்பா ‘போக்ஸோ’வில் கைது

Updated On : 6 மார்ச், 2026 at 12:23 AM
கைது
பகிர்:

ஒரத்தநாடு அருகே அண்ணனின் 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சித்தப்பாவை போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்கில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது உறவுக்காரரான அண்ணன் வீட்டில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவரும், குற்றப்பின்னணி உடையவருமான புலி சரவணன் என்கிற சரவண குமாா் (23) தங்கினாா். அப்போது, அவரது அண்ணன் மகளான ஐந்து வயது சிறுமியின் தாய் குளிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதைத்தொடா்ந்து, சிறுமியிடம் மாற்றத்தை அறிந்த அவரது தாய் அவரிடம் விசாரித்தபோது, சரவண குமாா், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கன்னிகா மற்றும் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சித்ரா ஆகியோா் தலைமறைவாக இருந்த சரவணகுமாரை வியாழக்கிழமை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, சரவண குமாா் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →