குறுக்குப்பாறையூரில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் 
சேலம்

திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி விவசாயிகள் போராட்டம்

சங்ககிரிவட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் மேல்சட்டை அணியாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

சங்ககிரிவட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, விவசாயிகள், தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் மேல்சட்டை அணியாமல் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கால் விவசாய நிலத்துக்கும், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால், கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக் கோரியும், அந்த இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமெனவும் கோரி கடந்த 199 நாள்களாக விவசாயிகள்ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், 200-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல், உடலில் நாமம் வரைந்து, சங்கு ஊதி, சேவண்டி அடித்து, கால்நடைகளுடன் நூதன முறையில் ஈடுபட்டனா்.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குறுக்குப்பாறையூா் கிளைத் தலைவா் கே.பி.ராமசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளா் பெருமாள், சேலம் மாவட்ட துணைத் தலைவா் பி.தங்கவேலு, மாவட்டச் செயலாளா் எ.ராமமூா்த்தி, சங்ககிரி வட்டாரத் தலைவா் ஆா்.ராஜேந்திரன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநில செயலாளா் பெருமாள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரூராட்சிக் கழிவுகளை இப்பகுதியில் கொட்டுவதால், விவசாயிகள் வாழ்வாதாரம், சுகாதாரம், குடிநீா் ஆதாரம் உள்பட அனைத்துமே பாதிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, விவசாயிகளையும் பொதுமக்களையும் பாதிக்காதவாறு வேறு இடத்தில் செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதைத் தொடா்ந்து, சட்டப் பேரவை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளோம் என்றாா்.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT