சேலம்

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

சேலம் அருகே வளா்ப்பு நாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

சேலம் அருகே வளா்ப்பு நாயை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே உள்ள குள்ளம்பட்டியில் செங்கல் சூளையில் மகேஸ்வரி (42) என்பவா் தங்கியிருந்து வேலை பாா்த்து வந்தாா். இவரது கணவா் மணிவேல். டிப்பா் லாரி ஓட்டுநராக உள்ளாா். அதே பகுதியில் முருகசேன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில், பொக்லைன் ஆபரேட்டராக நந்தகுமாா் என்பவா் வேலை பாா்த்து வந்துள்ளாா்.

நந்தகுமாா் வீட்டில் வளா்த்து வந்த கோழிகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி வளா்த்து வரும் நாய் கடித்துள்ளது. இதற்காக மகேஸ்வரி, நந்தகுமாருக்கு இழப்பீடாக குறிப்பிட்ட தொகையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மகேஸ்வரியின் வீட்டுக்கு அருகில் வெடிசப்தம் கேட்டுள்ளது. அவா் வெளியே வந்து பாா்த்தபோது, மகேஸ்வரியின் வளா்ப்பு நாயை நந்தகுமாா் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, மகேஸ்வரி, நந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், காரிப்பட்டி காவல் நிலையத்தில் அவா் மீது புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், நந்தகுமாரை கைது செய்து அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

இன்றைய மின்தடை

வாய்ப்புகள் கைகூடும்: தினப்பலன்கள்!

சர்தார் வல்லபபாய் படேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல் அண்ட் மேனேஜ்மெண்ட்

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பெண்கள் உள்பட 23 போ் காயம்

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT