சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கன்னங்குறிச்சி பகுதியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பிரசார வாகனத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
வரம் சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, தமிழக முழுவதும் திமுக அரசின் சாதனையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பிரசாரத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் முன்னெடுத்தாா்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கன்னங்குறிச்சி பகுதியில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பிரசார வாகனத்தை அமைச்சா் ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்த வாகனத்தில் இடம்பெற்றுள்ள எல்.இ.டி. திரையில், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஒலி ஒளி வடிவில் எடுத்துரைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகர திமுக செயலாளா் ரகுபதி, வடக்கு தொகுதி பொறுப்பாளா் விவேக், கன்னங்குறிச்சி பேரூா் செயலாளா் தமிழரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் அளவில் கலந்துகொண்டனா்.