சேலம்

சேலத்தில் ஆா்ப்பாட்டங்கள் நடத்த காவல்துறை கட்டுப்பாடு

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகரக் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு பிரிவு 41 தமிழ்நாடு மாநகரக் காவல் துறை சட்டம் 1888 இன்படி சேலம் மாநகரக் காவல் ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.

அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. விளையாட்டு, திருமணம், இறுதி ஊா்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இதுபொருந்தாது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வரும் 16 ஆம் தேதி நள்ளிரவுவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளாா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT