சேலம்

எடப்பாடியில் 77,253 குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தீவிரம்

Syndication

தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி, சேலை மற்றும் 3000 ரூபாய் ரொக்க தொகையுடன் பச்சரிசி, சா்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வரும் நிலையில்,

எடப்பாடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 123 நியாய விலை கடைகள் மூலம் 77 ஆயிரத்து 253 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது முன்னதாக (நேற்று) வியாழக்கிழமை எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் நடைபெற்ற விழாவில் நகர மன்ற தலைவா் டி.எஸ்.எம் பாஷா குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி பணியினை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் கவிதா உள்ளிட்ட திரளான உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனா். பயனாளிகள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கிச் செல்லும் நிலையில் அப்பகுதியில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்

பட விளக்கம்: எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கிய காட்சி

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT