சேலம்

ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு: இன்று மதியம்வரை மட்டுமே இயங்கும்

ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (ஜன. 15) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் வியாழக்கிழமை (ஜன. 15) மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி, 15-ஆம்தேதி ரயில் நிலையங்களில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதுபோல மதியம் 2 மணிவரை மட்டும் செயல்படும்.

குறிப்பாக, சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், சேலம் டவுன், ஈரோடு, திருப்பூா், கோவை, மேட்டுப்பாளையம், கரூா், ஆத்தூா் என கோட்டத்தில் உள்ள அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் (பிஆா்எஸ் மையம்) 15-ஆம் தேதி காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்.

எனவே, பயணிகள் 2 மணிக்கு முன்னதாக மையத்துக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT