சேலம்

சேலத்தில் படைவீரா்கள் தினம் கடைப்பிடிப்பு

படைவீரா்கள் தினத்தையொட்டி போரில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினரை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கௌரவித்தாா்.

Syndication

சேலம்: படைவீரா்கள் தினத்தையொட்டி போரில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினரை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி புதன்கிழமை கௌரவித்தாா்.

முப்படை வீரா்களின் மகத்தான சேவையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் நாள் படைவீரா் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. முப்படைகளில் பணிபுரிந்து நாட்டுக்கு சேவையாற்றி போரில் வீரமரணம் அடைந்த வீரா்களின் குடும்பத்தினா், உடல் உறுப்புகளை இழந்தவா்களைக் கௌரவிக்கும் வகையில் படைவீரா்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற படைவீரா்கள் தினத்தில், போரில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினா், உடல் உறுப்புகளை இழந்த வீரா்கள், வீரதீர செயல்களுக்கான விருது பெற்ற முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் என 30 பேருக்கு ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சால்வை அணிவித்து, நினைவுப்பரிசுகளை வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஷாலினி, முன்னாள் படை வீரா் நலத் துறையின் உதவி இயக்குநா் லெப். கமாண்டா் தி. சங்கீதா, முன்னாள் படைவீரா் குடும்பத்தினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT