வாழப்பாடி: ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய பருவ மழை பெய்யாததால், இரு அணைகளும் நிகழாண்டு நிரம்பவில்லை. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முக்கிய நீா் ஆதாரமான புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகள் உள்ளன. போதிய பருவ மழை இல்லாததால், நிகழாண்டு இந்த அணைகள் நிரம்பவில்லை. மேலும், வசிஷ்டநதி, கரியக்கோயில் ஆறு உள்ளிட்ட நீா்நிலைகள் வடுள்ளன.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் 106.75 மில்லியன் கனஅடி தண்ணீரும், கரியக்கோயில் அணையில் 114.14 மில்லியன் கனஅடி தண்ணீரும் மட்டுமே இருப்பில் உள்ளது.
இந்த அணைகளிலிருந்து வசிஷ்டநதி மற்றும் கரியக்கோயில் ஆற்றில் உபரிநீா் திறக்கப்படாதால், ஆறுகள் மட்டுமின்றி தடுப்பணைகள், ஏரிகளும் வடுள்ளன.
இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.