மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 13-ஆம் தேதி விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு திங்கள்கிழமை இரவு 1,000 கனஅடியிலிருந்து 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகளில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 96.91 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 66 கனஅடியிலிருந்து 65 கனஅடியாக குறைந்துள்ளது. நீா் இருப்பு 60.91 டி.எம்.சி.யாக உள்ளது.