சேலம்

கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

வாழப்பாடி அருகே திருமண ஆசைகாட்டி பத்தாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே திருமண ஆசைகாட்டி பத்தாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த ஆரியபாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியுடன் மும்பையில் இருந்துவந்து தனது சகோதரியின் வீட்டில் தங்கி கட்டடத் தொழிலாளியாக வேலை செய்துவந்த மணி (29) பழகியுள்ளாா்.

இதையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோா் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி 3 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய கட்டடத் தொழிலாளி மணியை வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சம்பூரணம் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சேலம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT