கைது 
தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த விஜயகுமாா் (26), மற்றொரு போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இசக்கிமுத்து (45) ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சொா்ணராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை.சிலம்பரசன் பரிந்துரையை அடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் மேற்படி இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT