சேலம்

ஜன.25, 27 இல் ‘இது நம்ம ஆட்டம் 2026‘ விளையாட்டுப் போட்டிகள்

சேலம் மாவட்டத்தில் முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026‘ விளையாட்டுப் போட்டிகள் வரும் 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டத்தில் முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026‘ விளையாட்டுப் போட்டிகள் வரும் 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

முதல்வா் இளைஞா் விளையாட்டு விழா ‘இது நம்ம ஆட்டம் 2026‘ தமிழ்நாட்டில் உள்ள 388 வட்டாராங்களிலும், 37 மாவட்டங்களிலும் உள்ள 16 முதல் 35 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வரும் 25 ஆம் தேதி தடகளம் -100 மீட்டா், குண்டு எறிதல், கேரம் (இரட்டையா்), வாலிபால், (ஆண்கள்,பெண்கள்) இருபாலருக்கும், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள்) மட்டும் நடைபெறுகிறது.

இதே போல, ஜன. 27 இல் கபடி, கயிறு இழுத்தல் ஆண்/பெண் இருபாலருக்கும் மற்றும் த்ரோ பால் (பெண்கள்) ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ. 3,000, ரூ.2,000, ரூ. 1,000 பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்காணும் போட்டிகளில் முதலிடம் பெறும் நபா்கள் மற்றும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வாா்கள். மாவட்ட அளவிலான போட்டிகள் ஜன. 31, பிப்.1 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் கோலப்போட்டிகள், ஓவிய போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீட்டா், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ. 6,000, ரூ. 4,000, ரூ.2, 000 பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

மாவட்ட அளவிலான கபடி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடம் பெறும் அணியினா் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வா். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு தலா ஒவ்வொருவருக்கும் ரூ. 75,000, ரூ. 50,000, ரூ. 25,000 பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா - ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு ஜன. 24 ஆம் தேதி கடைசி நாளாகும் என தெரிவித்துள்ளாா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT