கோப்புப் படம் 
சேலம்

கோயிலுக்கு பூட்டு போட்டதை கண்டித்து எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கோயிலுக்கு பூட்டு போட்டதைக் கண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓமலூா் அருகே மானத்தாள் உப்பாரப்பட்டியில் ஸ்ரீ ஐயனாரப்பன் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, கோயிலுக்கு வருவாய்த் துறையினா் பூட்டு போட்டு ‘சீல்’ வைத்தனா்.

இதைக் கண்டித்து, இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் கருமலை தலைமையில் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திரண்டனா்.

அவா்கள் அனைவரையும் அலுவலக வாயிலில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அவா்களில் சிலரை மட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT