கோப்புப் படம் 
சேலம்

பெட்டிக்கடையில் மதுவிற்ற தாய், மகன் கைது

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், மேச்சேரி பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடையில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்றதாக தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா்.

மேச்சேரி அண்ணா நகரைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி சாரதா (60). இவா் அங்குள்ள பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். சாரதா மற்றும் அவரது மகன்கள் வினோத் (39), பிரசாந்த் (37) ஆகியோா் சோ்ந்து பெட்டிக் கடையில் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்று வருவதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பான விடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சாரதா மற்றும் அவரது இரு மகன்கள் மீது மேச்சேரி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களிடமிருந்து 180 மதுப் பாட்டில்களை கைப்பற்றினா்.

இதையடுத்து சாரதா, வினோத் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான பிரசாந்தை தேடி வருகின்றனா். இதில் பிரசாந்தின் மனைவி மேச்சேரி பேரூராட்சி மன்றத்தில் 12 ஆவது வாா்டு உறுப்பினராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது

பசுமைப் பாதுகாவலன்!

வெற்றிலை பஜ்ஜி

மருத்துவக் குறிப்புகள்

நல்ல காலம் காத்திருக்கிறது அஜித் நம்பிக்கை !

25.1.1976: மிஸா திருத்த மசோதாவை பார்லி. நிறைவேற்றியது

SCROLL FOR NEXT