முகப்பு
சேலம்

சகோதரி செல்லவிருந்த பள்ளி வாகனம் மோதி 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

Updated On : 28 ஜனவரி, 2026 at 3:29 AM
உயிரிழப்பு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 8:45 PM

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் 2 வயது பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

தாரமங்கலத்தை அடுத்த பாப்பம்பாடி ஊராட்சி, மொரம்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (38). இவருக்கு மனைவி அருணா (33), மகள்கள் ஹன்ஷிகா (4), யாஷ்விகா (2) உள்ளனா். இந்த நிலையில் ஹன்ஷிகா தாரமங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாா். நாள்தோறும் வீட்டிலிருந்து பள்ளி வாகனத்தில் சென்றுவந்தாா். வாகனம் அவரது வீட்டுக்கு அருகே வந்து ஹன்ஷிகாவை ஏற்றிச் செல்லும்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வீட்டுக்கு அருகே வந்த வாகனத்தில் ஹன்ஷிகா ஏறியுள்ளாா். அவரைத் தொடா்ந்து குழந்தை யாஷ்விகா ஓடிவந்துள்ளாா். அவரை யாரும் கவனிக்காத நிலையில் வாகனம் புறப்பட்டபோது, குழந்தை மீது மோதியதில் யாஷ்விகா படுகாயம் அடைந்தாா்.

Advertisement

ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட யாஷ்விகாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.