சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட ஒடசக்கரை பாறைவளவு, சின்னாம் பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ. 38 லட்சத்தில் புதிய தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதிய தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அரசிராமணி பேரூராட்சித் தலைவா் பி.காவேரி, திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து ஆகியோா் அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தனா்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலா் தம்பிதுரை, பேரூராட்சித் துணைத் தலைவா் கே.எ.கருணாநிதி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ஆனந்தன், உமாஆனந்தகுமாா், திமுக சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் இ.சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.