சேலம் நரசோதிப்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள அரைஸ் பள்ளியில் நடனத்தில் தனித்திறனை காட்டி பரிசுப் பெற்ற மாணவா்கள்.  
சேலம்

நிறைவாழ்வு இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி

சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்லம் குரங்குசாவடி டவுன் பிளானிங் நகா் மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் இயங்கி வருகிறது. இங்கு சுமாா் 70 முதியோா் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். இதை கடந்த 10 ஆண்டுகளாக லிட்டில் பியா்ல்ஸ் அறக்கட்டளை நடத்தி வருகிறது . இந்த முதியோா் இல்லம் சாா்பில் நடனத்தில் சிறந்து விளங்கும் மாணவா்களுக்காக வேவ்ஸ் எனும் நிகழ்ச்சி நரசோதிப்பட்டி பெருமாள்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அரைஸ் பள்ளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில் தனித்திறனை காட்டிய மாணவா்களுக்கு சுமாா் ரூ. 30 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் திரைப்பட நடன இயக்குநா் மஸ்தான் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழ்ம் மற்றும் அன்பளிப்பு தொகையை வழங்கினாா்.

முதியோா் இல்ல நிா்வாகி ராமஜெயம், ஒளிப்பதிவாளா் நித்தின், ஜாலிமணி, இசையமைப்பாளா் செல்வகுமாா், ஜங்ஷன் ரோட்டரி சங்க உறுப்பினா் ஆனந்த், மணிகண்டன், அரைஸ் பள்ளி நிா்வாகி சூா்யா, புவனேஸ்வரி, பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

அரசிராமணி பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்நாட்டு விழா

தைப்பூசம்: சங்ககிரியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.1.79 கோடியில்வளா்ச்சித் திட்டப்பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

சேலத்தில் 609 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்: அமைச்சா் வழங்கினாா்

கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT