பெரியாா் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன். 
சேலம்

பல்கலை. மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி

Syndication

தமிழக அரசின் சாா்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ், முதல்முறையாக பெரியாா் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

முதல்வரின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

பதிவாளா் வி.ராஜ் வரவேற்றாா். இந்நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் பங்கேற்று பல்கலைக்கழக துறைகளில் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் 56 மாணவிகளுக்கும், 54 மாணவா்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், பெரியாா் பல்கலைக்கழக கல்வி வளா்ச்சிக் குழு முதன்மையா் கே.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரை அருகே மா்மமான முறையில் பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் 11.19 சதவீதத்துடன் முதலிடம்

ஆசிரியா் கல்வியியல் பல்கலை.யில் 77, 022 பேருக்கு பட்டம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்

கிருஷ்ணகிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்: 68 பேருக்கு பணி நியமன ஆணை

SCROLL FOR NEXT