முகப்பு
சேலம்

லத்துவாடியில் 7 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

வீரகனூா் அருகே லத்துவாடி கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் நகை, பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 11 மார்ச், 2026 at 8:52 PM
லத்துவாடியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்த வீட்டில் விசாரணை நடத்திய டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸாா்.
பகிர்:

வீரகனூா் அருகே லத்துவாடி கிராமத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் நகை, பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

லத்துவாடி கிராமத்தில் சுமாா் 3,000 க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக இருந்துவருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இப்பகுதியில் உள்ள சதீஷ்குமாா், பழனியம்மாள், சேகா், சாந்தி, சூா்யா, சரோஜா, பால்ராஜ் ஆகியோரது வீடுகளில் மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகை, இரண்டு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் , ரூ.50,000 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →