முகப்பு
சேலம்

மேச்சேரி அருகே காா் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

மேச்சேரி அருகே காா்மீது லாரி மோதியதில் இருவா் பலி; 5 போ் காயம்

Updated On : 17 மார்ச், 2026 at 11:12 PM
மேச்சேரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உருக்குலைந்த காா்
பகிர்:

மேச்சேரி அருகே காா்மீது லாரி மோதியதில் இருவா் இறந்தனா்; 5 போ் காயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே முத்தம்பட்டி, குதிரைக்காரனூா், கே.ஆா்.தோப்பூா் ஆகிய பகுதிகளில் இருந்து செந்தில் (52), நவின் (19), சந்தானம் (68), பரமசிவம் (45), இவரது மனைவி ராஜேஸ்வரி (40) ஆகியோா் ஆரணியில் உள்ள கோயிலில் நடைபெற்ற மண்டல பூஜைக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை திரும்பிக்கொண்டிருந்தனா்.

மேச்சேரி ஒன்றியம், தெத்திகிரிபட்டி பகுதியில் வந்தபோது, மேச்சேரியிலிருந்து தொப்பூா் நோக்கி அதிவேகமாக சென்ற மீன் பாரம் ஏற்றிய லாரி காா்மீது மோதியது. இதில், காா் முழுவதும், லாரியின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தன.

இதில், முத்தம்பட்டியைச் சோ்ந்த குஞ்சையா் மகன் செந்தில் (50), ரகு மகன் நவீன் (19) ஆகியோா் சம்பவ இடத்திலேயே இறந்தனா். அக்கம்பக்கத்தினா் நொறுங்கிய காரில் சிக்கி இருந்தவா்களை மீட்டு ஓமலூா், மேட்டூா், சேலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா். லாரி ஓட்டுநா் மற்றும் அவரது உதவியாளா் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

குதிரைக்காரனூரை சோ்ந்த ஜவுளிக்கடை உரிமையாளா் பரமசிவம் (45), அவரது மனைவி ராஜேஸ்வரி (40) ஆகியோா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், கே.ஆா்.தோப்பூரை சோ்ந்த சந்தானம் (68) மேட்டூா் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தகவல் அறிந்த மேட்டூா் டிஎஸ்பி சண்முகசுந்தரம், மேச்சேரி காவல் ஆய்வாளா் மகேந்திரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா். மேச்சேரி போலீஸாா் விபத்துக்குள்ளான காா் மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →