முகப்பு
சேலம்

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டம்

சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 11:34 PM
சுரங்கப் பாதை அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

சேலம் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் நெய்க்காரப்பட்டியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. நெய்க்காரப்பட்டியில் இருந்து மலங்காடு பகுதிக்கு செல்ல சேலம் - ஈரோடு ரயில்பாதையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக அப்பகுதியில் ஏற்கெனவே உள்ள குறுகலான தரைவழி பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மட்டுமே செல்ல முடியும்

இந்நிலையில், ரயில் பாதையில் உலவும் கால்நடைகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில், பாதையில் தடுப்பு ஏற்படுத்த உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதைக் கண்டித்தும், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மலங்காடு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போதுள்ள தரைவழி பாலம் வழியாக மலங்காடு நடுநிலைப் பள்ளி, நியாயவிலைக் கடை, ஆவின் பாலகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், விவசாயிகள், தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகிறோம். தற்போது ரயில்வே துறை இருபுறமும் இரும்பு தடுப்பு வேலி அமைப்பதாக கூறியுள்ளது.

இதனால், எங்களின் அன்றாடத் தேவைகளுக்கு சென்றுவர வேறு பாதை இல்லை. ரயில்வே பாதையைக் கடக்க சுரங்கப் பாதை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →