மேட்டூா் அணையின் நீா்மட்டம் 83.21 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 83.21 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 83.21 அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த கோடை மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 342 கனஅடியிலிருந்து 175 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 83.36 அடியிலிருந்து 83.21 அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 1,700 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 45.23 டிஎம்சியாக உள்ளது.