தொகுதி அறிமுகம்! ஆத்தூர் (தனி)
ஆத்தூர் (தனி) 82
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் 1,09,943
பெண்கள் 1,16,517
மூன்றாம் பாலினத்தினர் 21
மொத்தம் - 2,26,481
வாக்குச்சாவடிகள் - 306
சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் (தனி) தொகுதி நகரமும், கிராமமும் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. பொது தொகுதியாக இருந்த ஆத்தூர் தொகுதி 2011 இல் தொகுதி மறுவரையின்போது தனித் தொகுதியாக மாறியது. 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
பிற தேவைகள்
ஆத்தூர் தொகுதியில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என்ற கடந்த கால வாக்குறுதி. இதுநாள் வரை நிறைவேற்றப்பட வில்லை. மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் தீண் டநாள் கோரிக்கைகள்
ஆத்தூரை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கம்வராயன் மலைக் கிராமத் தில் பழப்பண்ணை உள்ளதால், பழச்சாறு ஆலை. காய்கறிகள் அதிகமாக விளைவதால், காய்கறி களை பதப்படுத்தி சேமிக்கும் அறை போன்றவற்றை வேண்டும் என்ற கோரிக்கைகளும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஆத்தூர் நகராட்சிக்கு ராமநாயக்கன் பாளையத்தில் இருந்து குடிநீர் பெற்று வந்த தருணத்தில், மிகுந்த பஞ்சம் ஏற்பட்டபோது மறைந்த முன்னாள் முதல் வர் எம்.ஜி.ஆர். ஆத்தூர்- மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடி நீர் விநியோகம் செய்து பொதுமக்களுக்கு உதவினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் அங்குள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் பயனடைய தொடங்கியதால், கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய்கள் இதுவரை மூன்றுமுறை மாற்றப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
என்றாலும், ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளில் 10 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. மேலும், ஆத்தூர் பகுதியில் செல்லும் வற்றாத நதியாக வசிஷ்டநதி இருந்தது. இது. தற்போது கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கல்லாறு திட்டத்தை கொண்டு வருவதாகக் கூறி, வாக்கு கேட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டம் நிறைவேறினால். வசிஷ்டநதி வற்றாத நதியாக மாறி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தொழில் வளம்
இந்தத் தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது. விவசாயம் சார்ந்த மரவள்ளிக்கிழங்கு அரைவை ஆலை யால் சேகோ தொழில்வளம் பெற்றுள்ளது. ஒருகாலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா என அரிசிக்கு பெயர்பெற்ற ஆக் தூர் பின்னர் வெற்றிலை மற்றும் பாக்குத் தொழிலுக்கு வளம்சேர்த்தது. இதையடுத்து, பருத்தி, மரவள்ளிக்கிழங்கு. தற்போது மக்காச்சோளம் மற்றும் கோலியஸ் மூலிகைக் கிழங்கு போன்றவற்றைப் பயிரிட்டு விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர், நரசிங்கபுரம் என 2 நக ராட்சிகளுகம் 2 ஊராட்சி ஒன்றியங்களும் 3 பேரூராட்சிகளும் உள்ளன.