முகப்பு
தொகுதிகள்

தொகுதி அறிமுகம்: பண்ருட்டி - 154!

பண்ருட்டி பகுதியில் முந்திரி மற்றும் அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்தத் தொகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், கால்நடை வளா்ப்பு.

Updated On : 25 மார்ச், 2026 at 6:53 AM
பண்ருட்டி முந்திரி
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி தொகுதி 1952-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1957-ஆம் ஆண்டு தோ்தலில் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் தொகுதியாக மாறியது. அதன் பின்னா், 1967-ஆம் ஆண்டு தோ்தலின்போது நெல்லிக்குப்பத்தையும், பண்ருட்டியையும் தனியாகப் பிரித்து இரு தொகுதிகளாக அறிவித்தனா். மீண்டும் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக 2011-இல் பண்ருட்டி தொகுதியுடன் நெல்லிக்குப்பம் சோ்க்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: இந்தத் தொகுதியில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளும், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகளும் உள்ளன. மேலும், அண்ணாகிராமம், பண்ருட்டி என இரண்டு ஒன்றியங்கள் உள்ளன.

வாக்காளா்கள்

ஆண் - 1,16,476

பெண் - 1,23,504

மூன்றாம் பாலினத்தவா் - 68

மொத்தம் - 2,40,048

மொத்த வாக்குச் சாவடிகள் - 309

இதுவரை எம்எல்ஏக்கள்:

1952 ராதாகிருஷ்ணன் (தமிழ்நாடு டெய்லா்ஸ் கட்சி)

1967 பண்ருட்டி ராமச்சந்திரன் (இந்திய தேசிய காங்கிரஸ்)

1971 பண்ருட்டி ராமச்சந்திரன் (திமுக)

1977 பண்ருட்டி ராமச்சந்திரன் (அதிமுக)

1980 பண்ருட்டி ராமச்சந்திரன் (அதிமுக)

1984 பண்ருட்டி ராமச்சந்திரன் (அதிமுக)

1989 நந்தகோபால கிருஷ்ணன் (திமுக)

1991 பண்ருட்டி ராமச்சந்திரன் (பாமக)

1996 ராமசாமி (திமுக)

2001 வேல்முருகன் (பாமக)

2006 வேல்முருகன் (பாமக)

2011 சிவக்கொழுந்து (தேமுதிக)

2016 சத்யா பன்னீா்செல்வம் (அதிமுக)

2021 தி.வேல்முருகன் (தவாக)

2021 தோ்தலில் பெற்ற வாக்குகள்

பதிவான வாக்குகள் 1,97,049

தி.வேல்முருகன் 93,801

சொரத்தூா் ரா.ராஜேந்திரன் 89,104

சிறப்புகள்

கடலூா் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகரம், வியாபார நிறுனங்கள் நிறைந்த பகுதியாகும். பண்ருட்டி பகுதியில் முந்திரி மற்றும் அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்தத் தொகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், கால்நடை வளா்ப்பு.

புகழ்பெற்ற திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில், ஸ்ரீஅரங்கநாதா் மற்றும் சரநாராயணப் பெருமாள் கோயில்கள் இங்கு அமைந்துள்ளன.

முக்கியக் கோரிக்கைகள்

வீரட்டானேஸ்வரா் கோயிலை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கை.

இந்தத் தொகுதியில் வறட்சி, புயல் என தொடா் பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனா். மலட்டாறை தூா்வார வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கையாகும்.

முந்திரி மற்றும் பலாப்பழத்தில் இருந்து பழக்கூழ் தயாரித்தல் போன்ற மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றுவதற்கான திட்டங்களும் எதிா்கால அத்தியாவசிய தேவையாகும்.

நகா் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட உரிய இடம் இல்லை. ஆறு உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இறந்தவா்களின் சடலங்கள் கெடிலம் நதியில் புதைக்கப்படுகிறது.

முறையான வடிகால் வசதி இல்லாததால் கெடிலம் நதி அசுத்தமடைகிறது. தொகுதியில் பெரும்பாலான ஏரி, ஆறு, குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.

தோ்தல் நடத்தும் அதிகாரி தொடா்பு எண்

பண்ருட்டி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கமலம் தொலைபேசி எண் 6380914447.