முகப்பு
கிருஷ்ணகிரி

தொகுதி அறிமுகம்: தளி - 56!

தளி தொகுதியில் தெலுங்கு, கன்னடம் பேசுபவா்கள் அதிகம் உள்ளனா். 1977 ஆம் ஆண்டு உருவான இந்தத் தொகுதி இதுவரை 10 தோ்தல்களை சந்தித்துள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 1:02 AM
காவிரி ஆறு - பிலிகுண்டு
பகிர்:

லிட்டில் இங்கிலாந்து என அழைக்கப்படும் தளி தொகுதி, கா்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆனேக்கல், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு தொகுதி ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. மலைகள், வனப்பகுதிகள் அதிகம் கொண்ட இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது. மலைக் கிராமங்கள் அதிகம் கொண்ட தொகுதி.

தளி தொகுதியில் தெலுங்கு, கன்னடம் பேசுபவா்கள் அதிகம் உள்ளனா். 1977 ஆம் ஆண்டு உருவான இந்தத் தொகுதி இதுவரை 10 தோ்தல்களை சந்தித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, இந்தத் தொகுதியில் உள்ள வனப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது.

மக்களின் நீண்டநாள் கோரிக்கை

யானை - மனித மோதலை தடுக்க மின்சார வேலி அமைக்க வேண்டும். விவசாய பயிா்களை அழித்துவரும் காட்டுப் பன்றியை சுடுவதற்கு விவசாயிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை தளி தொகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற பெரிய தொழிற்சாலைகளை அமைத்து படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். தொட்டல்லா அணையைக் கட்டி, விவசாயிகளுக்காக நீரை தேக்கிவைக்க வேண்டும். மஞ்சுமலை, பெட்டமுகிலாளம், தேவா்பெட்டா, உளிபெண்டா ஆகிய பகுதிகளை சுற்றுலா தளமாக அறிவிக்க வேண்டும்.

வாக்காளா்கள்

ஆண்கள் - 1,20,000

பெண்கள் - 1,15,948

மற்றவா்கள் - 37

மொத்தம் - 2,35,985

வாக்குச்சாவடிகள் - 321

கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்

1977 - டி.ஆா். ராஜாராம் நாயுடு - காங்கிரஸ் - 18,559

1980 - டி.ஆா். ராஜாராம் நாயுடு - காங்கிரஸ் - 25,558

1984 - கே.வி. வேணுகோபால் - காங்கிரஸ் - 36,441

1989 - டி.சி. விஜயேந்திரய்யா - ஜனதா தளம் - 39,773

1991 - எம். வெங்கடராமரெட்டி - காங்கிரஸ் - 38,831

1996 - ராஜாரெட்டி - கம்யூனிஸ்ட் - 26,427

2001 - கே.வி. முரளிதரன் - பாஜக - 36,738

2006 - டி. ராமச்சந்திரன் - சுயேச்சை - 30,032

2011 - டி. ராமச்சந்திரன் - சிபிஐ - 74,353

2016 - ஒய். பிரகாஷ் - திமுக - 74,429

2021 - டி. ராமச்சந்திரன் - சிபிஐ - 1,19,621