முகப்பு
சேலம்

கடும் வெயிலால் இலைகள் கருகும் வாழை மரக்கன்றுகள்

அரசிராமணி பகுதியில் கடும் வெயிலால் இலைகள் கருகிய நிலையில் உள்ள வாழை மரக்கன்றுகள்.

Updated On : 2 மே, 2026 at 12:05 AM
அரசிராமணி பகுதியில் கடும் வெயிலால் இலைகள் கருகிய நிலையில் உள்ள வாழை மரக்கன்றுகள்.
பகிர்:

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரக்கன்றுகள் கடும் வெயிலால் இலைகள் கருகும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தேவூா் அருகே அரசிராமணி, குள்ளம்பட்டி, பாரதி நகா், மூலப்பாதை, தண்ணிதாசனூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கதலி, நேந்தரம், மொந்தவாழை, பூ வாழை உள்ளிட்ட ரகங்கள் கொண்ட வாழைக் கன்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனனா். தற்போது அப்பகுதியில் வெயில் அதிகரித்து வருவதால், வாழைக் கன்றுகளின் இலைகள் கருகி பழுப்பு நிறத்துக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து, கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.