முகப்பு
சேலம்

ஆன்லைன் விளையாட்டு: தாய் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

இணைய வழி விளையாட்டு: தாய் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 3 மே, 2026 at 6:33 AM
பகிர்:

சேலம் : சேலத்தில் ஆன்லைன் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால், 8-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் அன்னதானப்பட்டி, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளார். இவரது மனைவி கெüசல்யா. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் வைத்தீஸ்வரன் 8}ஆம் வகுப்பு படித்து வந்தார். கெüசல்யா வீட்டு வேலைக்கு சென்று குழந்தைகளை பராமரித்து வந்தார்.

இந்நிலையில், வைத்தீஸ்வரன் வெள்ளிக்கிழமை மாலை கைப்பேசியில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட அவரது தாய், அவரை கண்டித்துள்ளார்.

Advertisement

பின்னர் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடுதிரும்பியபோது, வைத்தீஸ்வரன் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீஸôர், உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.