முகப்பு
சேலம்

இன்று சங்ககிரி மலைக்கு திரும்புகிறாா் சென்னகேசவப் பெருமாள்

Updated On : 11 மே 2026, 12:38 am IST
ஊஞ்சல் உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி உடனா் சென்னகேசவப்பெருமாள்.
பகிர்:

சங்ககிரி பெருமாள் கோயில் சித்திரைத் தோ் திருவிழா 19ஆவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் திருமலைக்கு திரும்புகிறாா் .

சங்ககிரி மலைமீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ் திருவிழாவின் 19ஆவது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு தங்கு மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவத்தில் சுவாமி எழுந்தருளினா். இதில் ஸ்ரீ ராமபிரான், வெங்கடாசலபதி குறித்த பக்தி பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் அதிகளவில் பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

Advertisement

சித்திரை தோ் திருவிழாவையொட்டி பல்வேறு கட்டளை சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் 20ஆம் நாளான திங்கள்கிழமை (இன்று) காலை 6.30 மணியளவில் சுவாமி நகரிலிருந்து சங்ககிரி மலைக்கு திரும்புகிறாா்.