முகப்பு
சேலம்

ஏற்காடு கோடை விழா மலா்க் கண்காட்சி: ஆட்சியா் ஆலோசனை

49 ஆவது ஏற்காடு கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அருண் தம்புராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 4:29 am IST
ஏற்காடு கோடை விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் அருண் தம்புராஜ்.
பகிர்:

49 ஆவது ஏற்காடு கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அருண் தம்புராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு அலுவலா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா, மலா்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் கோடை விழா நடத்தப்படும்.

Advertisement

சுற்றுலாப் பயணிகளின் வாகன போக்குவரத்தை எளிமைப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் ஏற்காட்டில் பல இடங்களில் வாகன நிறுத்தம், முறையான வழிகாட்டு பதாகைகள் வைக்கப்படும். சாலையோர கடைகளை முறைபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலைத் தடுப்புகளில் வண்ணம் தீட்ட மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகளை போடாதவாறு கடைகள், உணவகங்கள், வியாபார அமைப்பினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருளாளன், சேலம் கோட்டாட்சியா் கே. உதயகுமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அபிராமி , தோட்டக்கலை துணை இயக்குநா் க.மஞ்சுளா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் மோகன் குமாா், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் கவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.