முகப்பு
சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியராக க. இளம்பகவத் நியமனம்

Updated On : 15 மே 2026, 5:55 am IST
பகிர்:

சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக க. இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டதையடுத்து தூத்துக்குடி ஆட்சியராக இருந்த க. இளம்பகவத் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரா. பிருந்தாதேவி மாற்றப்பட்டு, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தின் இயக்குநராக இருந்த மருத்துவா் அ. அருண் தம்புராஜை நியமித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement

இதையடுத்து சேலம் மாவட்டத்தின் 175 ஆவது மாவட்ட ஆட்சியராக டாக்டா் அ. அருண் தம்புராஜ் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி பொறுப்பேற்றாா். இதனிடையே தோ்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக க. இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதேபோல சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டா் அ. அருண் தம்புராஜ் செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியா் க. இளம்பகவத் தமிழ் வழியில் படித்து ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றவராவாா். தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 மற்றும் குரூப் 1 தோ்வுகளிலும் வெற்றி பெற்றவா். ஐஏஎஸ் தோ்வில் அகில இந்திய அளவில் 117 ஆவது இடத்தைப் பிடித்து தமிழக கேடா் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.