முகப்பு
சேலம்

சுற்றுலா வேனில் ஜனநாயகன் திரைப்படம்: வேன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு

சங்ககிரி அருகே சுற்றுலா வேனில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது தொடா்பாக வேன் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 18 மே 2026, 3:02 am IST
ஜன நாயகன் போஸ்டர் - படம் | ஏஎன்ஐ
பகிர்:

சங்ககிரி அருகே சுற்றுலா வேனில் ஜனநாயகன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது தொடா்பாக வேன் ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தவெக சங்ககிரி நகர செயலாளா் சி.மணிகண்டன், நகர இளைஞரணி அமைப்பாளா் வி. ஆதிகேசவன் ஆகியோா் கடந்த 14 ஆம் தேதி சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள குப்பனூா் சந்திப்பில் உள்ள தனியாா் பேக்கரி கடையில் தேநீா் அருந்தி கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு தேநீா் அருந்த நிறுத்திய சுற்றுலா வேனில் மத்திய திரைப்பட தணிக்கைக் குழு சான்றிதழ் அளிக்காத ஜனநாயகன் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதை கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தவெக நகரச் செயலாளா் சி. மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸாா் சுற்றுலா வேன் ஓட்டுநா் சீனிவான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement