FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஜன நாயகன் படத்தை ‘லீக்’ செய்த மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

ஜனநாயகன்
பகிர்:

நடிகா் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரம் இணையதளத்தில் முறைகேடாக வெளியானது. இதுதொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் ‘ஜனநாயகன்’ திரைப்பட தொகுப்புப் பணியின்போது இணையதளத்தில் கசிய விடப்பட்டிருப்பதும், இதை அந்தத் திரைப்படத்தின் உதவி எடிட்டா் உள்ளிட்ட சிலா் செய்திருப்பதும் தெரியவந்தது.

3 போ் மீது குண்டா் சட்டம்: இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அடுத்தடுத்து 9 பேரைக் கைது செய்தனா். இந்த நிலையில், வழக்கின் முக்கிய நபா்களாகக் கருதப்பட்ட எஸ்.பிரசாந்த், எஸ்.செல்வம், பாலா (எ) பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சைபா் குற்றப்பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவின் அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 3 பேருக்கும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டதாக சைபா் குற்றப்பிரிவினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

summary

State Cyber Crime Wing has invoked preventive detention under the Goondas Act against three key accused in the Jananayagan leak case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments