மதுரை

தேனி புதிய குடிநீர் திட்டத்துக்கு அரசு அனுமதி கிடைக்குமா?

தேனி, டிச. 19:தேனியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வ

கோ.ராஜன்

தேனி, டிச. 19:தேனியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி அல்லிநகரம் நகர்மன்றப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு 1964-ம் ஆண்டு பழனிசெட்டிபட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து குடிநீர்த் தொட்டிகள் மூலம் நகர் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

நகர் விரிவடைந்ததைத் தொடர்ந்து, வீரப்ப அய்யனார் கோவில் குடிநீர் திட்டம் மற்றும் குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 9 உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதில் குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மழைக் காலத்தில் தண்ணீரில் மூழ்கி விடுவதாலும், கோடை காலத்தில் வறட்சி காரணமாகவும் செயலிழந்துவிட்டன. நகராட்சி சார்பில் புதிதாக ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 2 உறை கிணறுகளும், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்துவிட்டன. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்துப் பகுதிகளுக்கும் 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

புதிய திட்டம்: குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாறு பகுதியில் இருந்து கிராவிட்டி முறையில் தண்ணீர் கொண்டுவர நகர்மன்ற நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அதிக நிதி தேவைப்படும் என்பதால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பின்னர், தேனியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் இருந்து குடிநீர் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதை பரிசீலித்த மதுரையில் செயல்படும் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு, பாசன வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட பிக்கப் டேம் பகுதியில் புதிய குடிநீர் திட்டத்துக்கு அனுமதி வழங்க இயலாது என மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்க, பொதுப்பணித் துறை செயலரை மாவட்ட நிர்வாகம் அணுகியுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் தேனி நகர செயலர் சி.மணவாளனிடம் கேட்டபோது, வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் ஏற்கெனவே சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம், மதுரை குடிநீர் திட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியிலிருந்து தேனி குடிநீர் திட்டத்தையும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT