மதுரை

இதய நோய்க்கு நவீன மின்காந்த சிகிச்சை

மதுரை, ஜன. 6: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்காந்த அலைகள் மூலம் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இதயம் நிமிடத்துக்கு 60

ஜெயப்பாண்டி

மதுரை, ஜன. 6: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதன் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின்காந்த அலைகள் மூலம் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு இதயம் நிமிடத்துக்கு 60 முதல் 90 தடவை துடிக்க வேண்டும். இவ்வாறு துடிப்பதற்கான சக்தி இதயத் தசைகளில் அதிர்வுகளாகப் பரவும். அப்படி பரவும்போது அவை சமமாகப் பரவினாலே இதயம் சீராக இயங்கும்.

சிலருக்கு பிறவிக் கோளாறு மற்றும் இடையில் ஏற்படும் பாதிப்புகளால், இதயம் துடிக்கத் தேவையான அதிர்வுகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சீராகப் பரவாத நிலை ஏற்படும்.    குறிப்பிட்ட இடத்தில் அந்த அதிர்வுகள் சுற்றிச் சுற்றி வருவதால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இந்தப் பாதிப்பு ஏற்படும் நோயாளி திடீரென மயக்கமாகிவிடுவார். சாப்பிட்டால் புரையேறி, மூச்சுத் திணறலுக்கும் ஆளாவார். இவ்வாறு பாதிக்கப்படும் நோயாளியை சரியாக கவனித்து, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே பாதிப்பு ஏற்படும்.

இந்தப் பாதிப்பை ரடர நவசஈதஞஙஉ என டாக்டர்கள் அழைக்கின்றனர். இதயத்தில் எந்த இடத்தில் அதிர்வு பரவல் பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்பதும் டாக்டர்களது கருத்தாகும்.  

இத்தகைய பாதிப்பை எலெக்ட்ரோ பிஜியலாஜிக்கல் டெஸ்ட்டிங் எனும் சாதனம் மூலம் அறியலாம். நோயை அறிந்தாலும், இதுவரை மாத்திரை சாப்பிட்டே நோய் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன்படி சம்பந்தப்பட்ட நோயாளி மாதந்தோறும் ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை மாத்திரை வாங்க செலவழிக்கும் நிலை ஏற்பட்டது.

இத்தகைய நிலையில்தான் மின்காந்த அலைகளைச் செலுத்தி இதயப் பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சை அறிமுகமாகி உள்ளது. இதயத்தை இயக்கத் தேவைப்படும் அதிர்வுகள் தொடர்ந்து செல்லாமல் தேங்கும் இடத்தை எலெக்ட்ரோ பிஜியலாஜிக்கல் டெஸ்ட்டிங் சாதனம் மூலம் அறிகிறார்கள். பின்னர் கதீட்ரல் எனும் மெல்லிய கம்பியை தொடை நரம்பு மூலம் இதயப் பகுதிக்குச் செலுத்தி, பாதிப்புக்குள்ளான பகுதியில் கதீட்ரல் மூலம் மின்காந்த அலைகளைச் செலுத்துகிறார்கள். இதயத் தசைகளில் பரவும் மின்காந்த அலைகள், இதய செயலுக்கான அதிர்வுகள் செல்ல முடியாமல் தடை ஏற்படுத்தும் பகுதியை அழித்து, அதிர்வுகள் தொடர்ந்து செல்ல வழி ஏற்படுத்தும் என்கிறார்கள் டாக்டர்கள்.

 இதுபோன்ற சிகிச்சையால் மாத்திரை சாப்பிடாமலேயே நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்று கூறுகிறார் மதுரை அரசு மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் வி.அமுதன்.

மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த வசந்தா (50), தத்தனேரியைச் சேர்ந்த மாரியம்மாள் (45) ஆகியோருக்கு மின்காந்த அலைகள் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இருவரது கணவர்களுமே கூலித் தொழிலாளர்கள். இதுபோன்ற சிகிச்சையை தனியாரிடம் மேற்கொண்டால் லட்சக்கணக்கில் செலவாகும் என்பதும் டாக்டர்களது கருத்தாகும்.

  இச்சிகிச்சையை மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவு தலைவர் வி.அமுதன்,  டாக்டர்கள் நாராயணன் நம்பூதிரி, ஜனார்த்தனன், பாலசுப்பிரமணியன், நயினார் முகமது, சிவகுமார், கணேசன் ஆகியோர் மேற்கொண்டனர். டாக்டர்கள் குழுவை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.சிவகுமார் பாராட்டினார்.

  இதய நோய் சிகிச்சையில் சாதனை:

   அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் மட்டும் 2104 பேருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சையும், 283 பேருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டெண்ட் சிகிச்சையும், 43 பேருக்கு பலூன் மைட்ரல் சிகிச்சையும், 44 பேருக்கு பேஸ்மேக்கர் சிகிச்சையும், 6 பேருக்கு இதயத்தில் ஏற்படும் ஓட்டையை அடைக்கும் இரட்டைக் குடை சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.  இதில் 261 பேர் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். மதுரை மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயனடைந்த 390 பேரில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் மட்டும் 261 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT